18 அத்தியாயம் 18

பிரம்மாவின் மானசபுத்திரியான விஷ்ணுமாயா என்பவள், தன்னுடைய பெண் என்னும் அற்புத, உன்னத சக்தியால், பூமிக்கும், பூமியில் வாழ்பவர்களுக்கும் ஏதாவது தொண்டு செய்ய ஆசைப் பட்டாள். பிரம்மா அவளுக்கு அவள் அகத்தியரின் மனைவியாகப் போய் அவ்வாறு சேவை செய்யும் நேரம் வரும் எனச் சொன்னார். அதே சமயம், அகத்தியரும், கவேர மன்னனும் (சிலர் கவேர ரிஷி என்றும் சொல்வார்கள்) பூமியில் வாழும் மக்களுக்குத் தொண்டு செய்ய ஆசைப் பட்டதால் லோபாமுத்திரைக்கு, நீரின் வடிவமும், மனித வடிவும் சேர்த்தே தரப் பட்டது. ஒரே சமயத்தில் மோட்சத்தை வேண்டித் தவம் இயற்ற, பிரம்மாவும் அவர்களிடம் முறையே, கவேர மன்னனும், அகத்தியரும் இல்வாழ்வைப் பூரணமாக அனுபவித்து வந்ததுமே மோட்சம் கிட்டும் எனச் சொல்லி விடுகின்றார். அதன்படி கவேர மன்னனுக்கு ஒரு மகள் பிறக்கின்றாள். அழகென்றால் அழகு! அறிவென்றால் அறிவு! முகத்திலோ பரிபூரண ஒளி பிரகாசிக்கின்றது. இப்படிப் பட்ட பெண்ணை யாருக்குக் கல்யாணம் செய்து கொடுப்பது? கவேர மன்னன் யோசனையிலும், கவலையிலும் ஆழத் துவங்க, மன்னனுக்கு அசரீரியாகப் பதில் கிடைக்கின்றது, அகத்தியருக்குப் பெண்ணைக் கொடுக்கும்படியாக. என்ன, அந்தக் குள்ள ரிஷிக்கா, இத்தனை அழகான இளம்பெண்?

அகத்தியருக்கும், லோபாமுத்திரைக்கும் திருமணம் நடந்தது. லோபாமுத்திரையுடன் வழி நடந்தார் அகத்தியர். மலைகளிலும், காடுகளிலும் நடக்கவேண்டி வந்தது. ஆகவே லோபாமுத்திரையால் முடியாது எனக் கருதிய அகத்தியர் அவளின் நீர் வடிவைத் தன் கமண்டலத்திற்குள் அடைத்து எடுத்துக் கொள்கின்றார். உடல் வடிவில் லோபாமுத்திரை பின் தொடருகின்றாள். ஒரு இடத்தில் அகத்தியர் தவம் செய்யவும், மாலைக் கடன்களை முடிக்கவும் இடம் தேர்ந்தெடுத்து அமர, அப்போது அங்கே அர்ஜுனன் மிகுந்த தாகத்தோடு வருகின்றான். “நீர், நீர், எனக் கேட்கின்றான். அகத்தியரோ, தன் கமண்டலத்தைத் தர, அதை ஆவலுடன் எடுத்த அர்ஜுனன் அது காலியாக இருப்பது கண்டு திகைக்கின்றான் அகத்தியர் புன்முறுவல் பூக்கின்றார். மீண்டும் நடக்கின்றார் அகத்தியர். மீண்டும் ஒரு மலைப்பாங்கான இடம் வருகின்றது. இந்த இடம் நதிவடிவான லோபாமுத்திரைக்குத் தக்க இடம் என நினைக்கின்றனர் அனைவரும். ஆனால் அகத்தியரோ அப்படி நினைத்தாரா எனப் புரியவில்லை.

தன் கமண்டலத்தை ஓரமாய் வைத்துவிட்டுத் தன் தியான வேலைகளில் மூழ்குகின்றார் அகத்தியர். அப்போது ஒரு சிறு அந்தண இளைஞன் அகத்தியரின் கமண்டலத்தை எடுக்கின்றான். அதனுள் தான் அடைத்து வைத்திருக்கும் லோபாமுத்திரையின் நீர்வடிவுக்கு ஏதேனும் துன்பம் நேரிடுமோ என அஞ்சிய அகத்தியர் அந்தப் பையனைத் தடுக்க வருகின்றார். கமண்டலத்தைத் தூக்கிக் கொண்டு அந்தச் சிறுவன் ஓட, அகத்தியர் துரத்த, கடைசியில் அந்தச் சிறுவன் கமண்டலத்தைக் கீழே போட்டுவிட்டு ஓடுகின்றான். நீர் பெருக்கெடுத்து ஓடுகின்றது. அங்கே தும்பிக்கை நாதன் அபய கரத்துடன் காட்சி அளிக்கின்றார்

https://upload.wikimedia.org/wikipedia/commons/e/e3/InsideWallPic_(4).jpg

https://upload.wikimedia.org/wikipedia/commons/e/e3/InsideWallPic_%284%29.jpg

Feedback/Errata

Comments are closed.